கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி வாக்கு மூலம் ஒன்றை
அளிப்பதற்காக இன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் அங்கு
செல்லவில்லை. இருப்பினும் அவரது சட்டத்தரணிகள் குறித்த நேரத்தில் அங்கு
பிரசன்னமாகியிருந்தனர். இதன்போது அஸாத் சாலி எதிர்வரும் திங்கட்கிழமை
குற்றப் புலனாய்வு சென்று வாக்கு மூலம் அளிப்பார் என தெரிய வருகிறது.
வாக்குமூலம் ஒன்றை அளிக்கும்பொருட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு கொலன்னாவை வீதி தெமட்டகொடையில் உள்ள விசேட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வருமாறு அசாத் சாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கொழும்பு கறுவாத்தோட்ட பொலிசாரினாலேயே நேற்று மாலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அசாத் சாலியின் அலுவலகம் தெரிவித்தது.
நேற்று பிற்பகல் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அசாத் சாலியின் அலுவலகத்தை சோதனையிட்டுச் சென்ற பின்னர் அவரது அலுவலகத்திற்கு வந்த கறுவாத்தோட்ட பொலிசாரே இன்று வாக்குமூலம் அளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அவர் எதிர்வரும் திங்கட்கிழமை செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment