Wednesday, June 5

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு பிரத்தியேக மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்கள்


250px-University_of_peradeniya_2உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கடன் உதவி அல்லது புலமைப் பரிசில் வழங்கி மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் அனுமதிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
இவர்களுக்காக பிரத்தியேக மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள போட்டித் தன்மையைக் கருத்திற்கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய வழமையான மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களைப் போன்றே உரிய தரத்துடன் அவை பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் குறைந்தளவிலான புள்ளிகள் வித்தியாசத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் அனுமதி பெறத்தவறும் மாணவர்களுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல்கலைக்கழக பீடங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றின் ஊடாக மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்  .

No comments:

Post a Comment