Sunday, June 23

தமிழர்களின் கடவுளும் தற்காலிக இடங்களில்: ஐக்­கிய தேசிய கட்­சி

தமிழர்களின் கடவுளும் தற்காலிக இடங்களில்: 
ஐக்­கிய தேசிய கட்­சி

பல்­வேறு கார­ணங்­களினால் தமது சொந்த இடங்­களில் இருந்து இடம்­பெ­யர்ந்து அக­திக­ளாக எண்­ணற்ற கஷ்­டங்­­ளுக்கு முகம் கொடுத்து தமிழ் மக்கள் இன்று தமது வழி­பாட்­டுத்­ ­லங்­­ளையும் இழந்து கட­வு­ளையும் தற்­கா­லிக இடங்­களில் வைக்கும் துர்ப்­பாக்­கிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். இந்த நிலை­மை­யா­னது மிகவும் வேதனை­­ளிக்­கி­றது என்­கிறார் ஐக்­கிய தேசிய கட்­சியின் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஆர். யோக­ராஜன்.
நல்­லி­ணக்­கத்­தையும் சமத்­து­வத்­தையும் பற்றி நாள்­தோறும் பேசி வரும் இந்த அரசாங்கம் தமிழ் மக்­களின் உணர்­வு­களை மதிக்­காமல் இவ்­வாறு தான்­தோன்­றித்­­­மாக நடந்து கொள்­வது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்­பு­கின்றார்.
கொழும்பு, கொள்­ளுப்­பிட்டி, பூமா­ரி­யம் மன் ஆலயம் அகற்­றப்­பட்­டமை தொடர்பில் கருத்து தெரி­வித்த போதே அவர் இதனை தெரி­வித்தார். 80வருடங்­­ளுக்கு மேலாக பழைமை வாய்ந்த வர­லாற்று சிறப்புக் கொண்ட கொள்­ளுப்­பிட்டி பூமா­ரி­யம்மன் ஆலயம் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட்டுள்­­மையால் அப்­­குதி வாழ் தமிழ் மக்கள் மிகுந்த வேத­னை­­டைந்­துள்­ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்
இது போன்ற செயற்­பா­டு­களால் இனங்­­ளுக்­கி­டையே எப்­படி நல்­லி­ணக்­கத்தை ஏற்­­டுத்த முடியும். அபி­வி­ருத்தி என்ற போர்­வை­யி­லேயே அர­சாங்கம் இன்று
பூமா­ரி­யம்மன் கோவிலை அகற்­றி­யுள்­ளது. அதே இடத்தில் ஒரு புத்­­வி­காரை இருந்­தி­ருந்தால் அப்­படி செய்­தி­ருப்­பார்­களா? எனவே அந்தக் கோவிலை அதே இடத்தில் வைத்தே அபி­வி­ருத்திப் பணி­களை செய்ய முடியும் ஆனால் அதனை செய்­யா­துள்­­மைக்கு வேறு கார­ணங்கள் இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment