Friday, June 21

மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து களமிறங்குங்கள்: மு.கா. ஆதரவாளர்கள்

hassan-ali-mpமத்திய, வடக்கு, வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டுமென கட்சி ஆதரவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து கட்சி மேலிடம் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஹஸன் அலி எம்.பி. நவமணிக்குத் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியதன் பின்பு கட்சியின் உயர்பீடத்தில் இது குறித்து கலந்துரையாடப்படுமென்றும் பெரும்பாலும் தனித்துக் கேட்பதற்கான வாய்ப்புக் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை, மு.காவின் அரசு தாழ்ந்த மனப்பான்மையுடன் நடத்தும் விதம், இனவாதிகளின் முஸ்லிம் விரோதப் போக்குகளை அடிப்படையாக வைத்து அரசோடிணையாது தனித்து போட்டியிட வேண்டுமென ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாகவும் ஆதரவாளர்களே கட்சியின் பலம் என்ற நிலையில் தனித்துப் போட்டியிடும் வாய்ப்பு அதிகமாகவுள்ளதாகவும் இதுகுறித்து இறுதித் தீர்மானம் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசுடன் இணைந்து தான் போட்டியிட வேண்டுமென்பது குறித்து எந்தவித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை. அரசின் பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டே அரச செயற்பாடுகளை எதிர்த்து வருகிறோம். இவ்வாறானதொரு நிலையில் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் கிடையாதென்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment