Friday, June 21

மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

mervinபொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராக ஆளும் இலங்கை சுதந்திர கட்சியின்  மத்திய குழு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம் என கொழும்பு பேஜ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
களனி பிரதேச சபையின் உறுப்பினர் ஹசித மடவலவின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிரான ஒழுக்காற்று விசாரணை அறிக்கை கடந்த வாரமே கிடைக்கப் பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹசித மடவலவின் கொலையைத் தொடர்ந்து களனி தொகுதியின் அமைப்பாளர் பதவியை மேர்வின் சில்வா ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment