Friday, June 7

ஹோமாகம பல்கலைக்கழகத்தில் “பிரச்சினை” தீர்த்த BBS


ஹோமாகம, பாலி மற்றும் பெளத்த பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து கற்கும் மாணவர்களுக்கும் பிக்குகளுக்குமிடையில் உருவான பிரச்சினையைத் பொது பல சேனா தலையிட்டுத் தீர்த்து வைத்துள்ளதாக அறியமுடிகிறது.
இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து 60 பிக்குகள் இடை நிறுத்தப்பட்டதோடு உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என நீதிமன்ற ஆணையும் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பிக்குகளை தங்கு விடுதியை விட்டு வெளியேற விடாமல் மாணவர்கள் தடுத்து வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த சூழ்நிலையிலேயே பொது பல சேனா தலையிட்டு இப்பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொள்கை ரீதியாகப் பிளவு பட்டிருக்கும் இவ்விரு குழுக்களின் பிரச்சினையை அமைச்சர் எஸ்.பி. திஸானாயக்க தீர்த்து வைக்க முடியாமல் திண்டாடிய நிலையிலேயெ பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் தலையிட்டுத் தீர்த்து வைத்திருப்பது முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment